பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்…..பிரிவினைவாதிகள் எதிர்ப்பால் பதற்றம்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் ஷெர்- இ- காஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (19ம் தேதி) கலந்து கொள்கிறார்.

பிரதமரின் வருகைக்கு பிரிவினைவாத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கண்டன பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை நடக்கவுள்ள பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

தேர்வுகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்து வரும் செமஸ்டருக்கான தேர்வுகள் நாளைக்கு பதில் 20ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Prime Minister Modi will visit Kashmir tomorrow opposition from the separatists, பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்.....பிரிவினைவாதிகள் எதிர்ப்பால் பதற்றம்
-=-