Random image

பிரதமர் மோடி 68வது பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து

டில்லி:

பிரதமர் நரேந்திரே மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடிக்கு இன்று 68வது பிறந்தநாள். அதையொட்டி, குடியரசு தலைவர் உள்பட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மோடிக்கு வாழ்த்துதெரிவித்து டிவிட் செய்துள்ள ராகுல்,  பிரதமர் மோடிஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….  மோடி ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்... என்று தெரிவித்து உள்ளார்.