Random image

பிரதமர் மோடி 68வது பிறந்தநாள் இன்று: குடியரசு தலைவர் வாழ்த்து

டில்லி:

பிரதமர் நரேந்திரே மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மோடி நீண்ட ஆயுளுடன் நாட்டிற்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புமிக்க சேவை செய்ய வாழ்த்துவதாக கூறியுள்ளார். மோடி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.

எதிர்க்கட்சியான  அகில இந்திய காங்கிரஸ் சார்பிலும் டிவிட்டரில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலும் டிவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மோடியின் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது பிறந்தநாளை வாரணாசியில் பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடி எளிமையாக கொண்டாடும் மோ, அதைத்தொடர்ந்து காசி விஸ்வநாதர் ஆலயம் சென்று சிவபெருமானை தரிசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று வாரணாசி செல்லும் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.  மோடி சுற்றுப்பயணத்தை முன்னிட்டு  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மோடியின் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருவதால்,  அது தொடர்பான ஹேஷ்டேக்குகள் இன்று டிரெண்டிங்கில் உள்ளன.

கடந்த தனது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று தாயார் ஹிராபாவை சந்தித்து ஆசி பெற்றார் மோடி. ஆனால், இந்த ஆண்டு அப்படி எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று கூறப்படுகிறது.