பிரதமர் மோடியின் தமிழக பயண திட்டம் மாற்றம்

சென்னை:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வரும் 15ம் தேதி தமிழகம் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அன்று வெளிநாட்டு பிரதிநிதிகளை மோடி சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் தமிழக பயண தேதி மாற்றப்பட்டுள்ளது. வேறு பயண தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் மாதத்தில் இந்த பயணம் இருக்கலாம் என்று பாஜக.வினர் தெரிவித்துள்ளனர்.