இந்தியாவின் 100வது, சிக்கிம் மாநிலத்தின் முதலாவது விமான நிலையம்: மோடி திறந்து வைத்தார்

பாக்யாங்:

சிக்கிம் மாநிலத்தின் முதன் விமான நிலையம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.   இந்த விமான நிலையம் இந்தியாவின் 100வது விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பசுமை வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி  திறந்து வைத்தார்.

விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் சுமார் 605 கோடி ரூபாய் செலவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக இந்த விமான நிலையத்தில் தடுப்புச்சுவர் 80 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திற்கு மேலே 4500 அடி என்ற அளவில், சுமார் 990 ஏக்கர் பரப்பளவில்  பாக்யாங் என்ற கிராமப் பகுதியில்  விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிக்கிம் தலைநகர்  காங்டாக்கில் இருந்து 35 கி.மீ தொலைவிலும், இந்திய- சீனா எல்லையில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் இந்த விமான நிலையம்  உள்ளது.

விமான நிலையத்தின் எழில்மயமான உள்பகுதி

சிக்கிம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த  முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையம்  அடுத்த மாதம்  அக்டோபர் 4-ம் தேதி முதல் வர்த்தக ரீதியிலான போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சிக்கிம்  வருகையையொட்டி ம் மாநில விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி, சிக்கிமிலுள்ள இயற்கை அழகை ரசித்ததோடு, அதைப் படம்பிடித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

விமான நிலையத்தின் எழில்மிகு உள்பகுதி தோற்றம்

இந்த விமான நிலையம் 9 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு இப்பொழுதுதான் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை எழில் சூழ்ந்த விமான நிலையத்தின் விமான ஓடுபாதை

You may have missed