மோடி எம்.ஏ. படித்தது உண்மையா?: சந்தேகம் கிளப்பும் முன்னாள் பேராசிரியர் 

பிரதமர் மோடியின் எம்.ஏ பட்ட மேற்படிப்புக் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் குஜராத் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்ஜெயந்திபாய் படேல்.

பிரதமர் மோடி குஜராத் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார், அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் ஜெயந்திபாய் படேல். அவர் இதுகுறித்து துகூறும்போது, மோடியின் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் அவர் படித்த காலகட்டத்தில் அங்கு கற்பிக்கப்படவில்லை. குறிப்பாக எம்.ஏ பார்ட் -2ஆவது பாடத்தில் மோடி படித்ததாகக் கூறப்படும் விஷயங்களில் பல முரண்கள் உள்ளன.

மேலும் மோடி வகுப்புக்  தவறாமல் வந்தது இல்லை. அவருடைய பதிவு மிகவும் குறைவு.அதேபோல் கல்லூரியில் நடத்தப்பட்ட கருத்தரங்கிலோ கலந்துரையாடல்களிலோ அவர் கலந்துகொண்டது இல்லை’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மறுப்புத்  தெரிவித்த  குஜராத் பல்கலைக் கழகம், மோடியின் சான்றிதழ்கலில் குறிப்பிடப்படட் பாடங்கள் அப்போது பயிற்றுவிக்கபட்டன எனக் கூறியுள்ளது.

மோடி தனது பி.ஏ டிகிரியை டெல்லி பல்கலை கழகத்தில் 1979-ல் பெற்றார். ஆனால் இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.