அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!

டில்லி:

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை டில்லி திரும்பிய பிரதமர் மோடி, நேராக மறைந்த  மறைந்த முன்னாள் நிதிஅமைச்சர் அருண்ஜெட்லியின் டெல்லி இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 22ந்தேதி  காலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக  புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையில், உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு இருந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடந்த 24ந்தேதி காலமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர், வெளிநாட்டில் இருந்து இரங்கல் தெரிவித்த நிலையில், இன்று காலை தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார்.

அதைத்தொடர்ந்து,  டில்லியில் உள்ள அருண் ஜெட்லி வீட்டுக்குச் சென்ற மோடி, அவரது குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார்.

கார்ட்டூன் கேலரி