காத்மாண்டு:

ரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலை அங்குள்ள முக்திநாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள  இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமான முக்திநாத் கோவில்.

இந்த கோவிலுக்கு இந்திய பிரதமர் மோடி இன்று சென்றார். சிறிது மலைப்பகுதி வழியாக நடந்த சென்ற அவர், கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மக்களுடன் இணைந்து தனது பயணத்தை மேற்கொண்டார்.

பிரதமர் மோடிக்கு அங்குள்ள மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். அங்கு கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி முக்திநாத் கருவறை பிரகாரத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார். அதைத்தொடர்ந்து கோவிலின் தலைமை பூஜாரி அவருக்கு பிரசாதம் கொடுத்தார்.

நேற்று நேபாளத்தில் உள்ள ஜானக்பூரில் உள்ள ஜானகி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருடன் நேபாள பிரதமர் சர்மா ஒளியும் பங்கேற்றார். தொடர்ந்து  ஜானக்பூருக்கும் ராமர் பிறந்த நகரான அயோத்திக்கும் இடையே நேரடி பேருந்து போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

பின்னர் ஜானக்பூரில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நேபாள பிரதமர் சர்மா ஒளியுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். நேபாள அதிபர் பிந்தியா தேவியையும் மோடி சந்தித்துப் பேசினார்.