பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்

டெல்லி :

கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கக்கூடிய அசாதாரண சூழலில், அது குறித்த சர்வதேச நிலைமையையும், அரசு எடுத்திருக்கும் முயற்சிகளையும் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் “மார்ச் 19, 2020 அன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களிடையே உரையாற்றுவார், அதில் அவர் கோவிட் -19 தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதை சமாளிப்பதற்கான முயற்சிகள் குறித்து பேசுவார்” என்று ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் இப்போது நாட்டின் முன் ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது இந்த முயற்சிகளையும் மக்கள் தரும் ஒத்துழைப்பையும் தனது ட்விட்டர்ல் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், இந்த பிரச்சினையை நாம் அனைவரும் கூட்டாக சமாளிக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.