2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக உ.பி.யில் இன்று பிரசாரம் தொடங்கும் பிரதமர் மோடி

 லக்னோ:

டுத்த ஆண்டு வர உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி உ.பி. மாநிலத்தில் இன்று தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்குகிறார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள பாராளுமனற்  தொகுதிகளை  கைப்பற்றும் நோக்கி பிரதமர் மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பாரதியஜனதா, அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள நாராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற எண்ணி தற்போதை காய்களை நகர்த்தி வருகிறது.

பாஜக தேசிய தலைவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜ தொண்டர்களை உஷார் படுத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியும் தேர்தல் களத்தல் குதித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறிவைத்து 2 நாட்கள் அங்கு முகாமிடும் பிரதமர், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

முதல் பிரசாரமாக தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பிரசாரத்தைதொடங்கும் மோடி, தொடர்ந்து  அசம்கர், மிர்சாபூர் பகுதிகளிலும்  பிரசாரம் செய்ய இருக்கிறார்.

வாரணாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசும் பிரதமர் மோடி, அசம்கர் நகரில்  புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பின்னர் வாரணாசி திரும்பும் மோடி அங்கிருந்து கச்னார் கிராமத்தில் நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் பேசுகிறார்.

தொடர்ந்து நாளை மிர்சாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மோடியின் பிரசார பயண திட்டங்களை மாநில பாஜக வகுத்து வருகிறது.