டில்லி, 

ஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே கடல்வழிப் பாதை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் இணைந்து அறிவித்தனர்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். தொடர்ந்து,  விலாடிவோஸ்டோக் கில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு புதினுடன்  சென்று கப்பல் கட்டும் தொழிலில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து இருவரும் இருநாட்டு பிரதிநிதிகளுடன் உயர்மட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, ரஷியாவின் விலாடி வோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷியாவின் வோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே ஒரு முழுமையான கடல்வழி பாதை அமைக்கப்பது குறித்து அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய மோடி,  ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது எனக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள், இது இருநாடுகளின் மக்களுக்கு இடை யிலான நட்பு உறவை நிரூபிக்கிறது என்றும், இந்தியா-ரஷ்யா நட்பு அந்தந்த தலைநகரங்களுக்கு மட்டுமல்ல. இந்த உறவின் மையத்தில் மக்களை வைத்து உள்ளோம் என்றும், இது  1.3 பில்லியன் இந்தியர்களுக்கும் மரியாதைக்குரிய விஷயம் என்றும்  கூறினார்.