நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு மீண்டும் வரும் பிரதமர் மோடி!

வருகிற நடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

pm

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சிக்காலம் நிறைவடையும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்திப்பதுடன் மக்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார். நேற்று முன் தினம் மதுரையில் நடைபெற்ற எயிம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற மோடி பொதுக்கூட்டத்திலும் பேசினார். இதற்கு அடுத்தக்கட்டமாக பிப்ரவரி மாதம் 10ம் தேதி திருப்பூருக்கும், 19ம் தேதி கன்னியாகுமரிக்கும் மீண்டும் மோடி வர உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதுடன் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி பேச உள்ளாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2004-ம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயினால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலைக்கு அடிக்கல் நாட்டினார். அதற்போது அந்த பகுதியில் நரிக்குளம் பாலம் கட்டும் பணிகள் முடிந்ததால் அதனையும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-