2019 கிரிக்கெட் உலகக்கோப்பை துவக்கத்தை அறிவித்த இளவரசர் ஹாரி

லண்டன்: இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கிய உலகக்கோப்பையின் முதல் ஆட்ட தொடக்கத்தை அறிவித்தார் அந்நாட்டு இளவரசர் ஹாரி.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கியிருக்கும் 2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலானது.

இதன் தொடக்கத்தை அறிவித்த இளவரசர் ஹாரி பேசியதாவது, “முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை கடந்த 1975ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. மற்றுமொரு உலகக்கோப்பை போட்டியை நடத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். 10 சிறந்த அணிகள் இந்த உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொண்டுள்ளன.

இங்கிலாந்தில் வாழும் பல இன மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களால், ஒவ்வொரு அணியும் தங்களின் சொந்த மண்ணில் விளையாடுவது போலவே உணரலாம்.

அடுத்த 6 வாரங்களுக்கு நாட்டின் நகரங்கள் அனைத்தும் பரபரப்பாக இருக்கும். உலகக்கோப்பை காய்ச்சல் அனைவரையும் பீடித்துக் கொண்டுள்ளது. இந்த போட்டித்தொடரில் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்த உலகக்கோப்பை துவக்கத்தை அறிவிக்கும் கெளரவத்தைப் பெற்றதற்காக மகிழ்கிறேன். என்னை நம்புங்கள்…இதில் எந்த ஒன்றையும் நீங்கள் இழக்க விரும்பமாட்டீர்கள்” என்றார்.

கார்ட்டூன் கேலரி