தங்கள் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மார்க்கல் ஜோடி

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் தம்பதியினருக்கு அடுத்தாண்டு முதல் குழந்தை பிறக்க உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

meghan

இளவரசர் சார்லஸ் மற்றும் டயனாவின் இரண்டாவது மகனான பிரிட்டன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்களின் திருமணம் கடந்த மே மாதம் 19ம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.40 மணிக்கு விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சியாக நடந்தது

இதையடுத்து, தற்போது இந்த தம்பதிகள் தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்துக் கொண்டிருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு முதல் குழந்தை பிறக்கவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர், கறுப்பினத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கலைத் திருமணம் செய்ததன் மூலம், இங்கிலாந்தின் முதல் கறுப்பின இளவரசி என்ற பெருமையை மேகன் மார்க்கல் பெற்றுள்ளார். இந்த அரசத் திருமணத்தின் மூலம், புதுமணத் தம்பதி இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் டச்சஸ் ஆப் சுசக்ஸ் (Duke and Duchess of Sussex) என்றும் அழைக்கப்பட உள்ளனர்.