மவுனம் கலைந்தார் இளவரசர் ஹாரி

லண்டன்:

இளவரசர் ஹாரி தனது மவுனத்தை கலைந்து முதன்முறையாக பேசத் தொடங்கினார்.

இளவரசி டயானா கடந்த 1997ம்ஆண்டு கார் விபத்தில் இறந்தார். தனது தாய் இறந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத இளவரசர் ஹாரி கடந்த 20 வருடங்களாக தனது உணர்வுகளை கட்டுப்படுத்தி வந்தார்.

தனது மனநிலை பாதிப்பு பிரச்னைகளை கூட வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்தார். தற்போது 32 வயதாகும் ஹாரி முதல் முதலாக தி டெய்லி டெலிகிராப் இதழுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘நான் எனது உணர்வுகளை கட்டுப்படுத்தியிருந்தேன். பல தருணங்களில் நான் உடைந்துபோயுள்ளேன். எனது துக்கத்தை சமாளிக்க முடியாமல் இருந்தேன். 2 ஆண்டுகள் முற்றிலும் குழப்பத்தில இருந்தேன்’’ என்றார்.

தற்போது ஹாரி மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஒரு அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.