இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் மனைவியும் ஆப்பிரிக்கா இடமாற்றமா?

ண்டன்

ங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கில் ஆகிய இருவரும் ஆப்பிரிகாவுக்கு குடி புக உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கில் ஆகியோர் மாற்றொரு இளவரசரான வில்லியம்ஸ் தம்பதியினருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் ஹாரியும் அவர் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றனர். இதற்கு பெண்கள் இருவரும் ஒத்துப் போகாததே காரணம் என கூறப்படுகிறது.

தற்போது கர்ப்பமாக உள்ள மேகன் மார்கில் விரைவில் தாயாக உள்ளார். அதை ஒட்டி லண்டனில் நேற்று முன் தினம் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஹாரி மற்றும் அரச குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில் ஹாரியும் மேகன் மார்கிலும் விரைவில் ஆப்ரிக்காவுக்கு குடிபுக உள்ளதாக இங்கிலாந்து பத்திரிகைகள் ஊகம் தெரிவித்துள்ளன.

இது குறித்து இங்கிலாந்து பத்திரிகைகள் ”ஏற்கனவே ஆப்ரிக்காவில் நடக்கும் இங்கிலாந்து அரசின் பல சமூக சேவை நிறுவனங்களை ஹாரி கவனித்து வருகிறார். அது மட்டுமின்றி கணவன் மனைவி இருவரும் சிறிது காலத்துக்கு இங்கிலாந்தை விட்டு வெளியே தங்க எண்ணி உள்ளனர். அமெரிக்கா போன்ற நாடுகளை ஹாரி அதிகம் விரும்புவதில்லை.

முன்பு ஒரு முறை ஆப்ரிக்காவுக்கு சென்ற ஹாரி தமக்கு அந்த கண்டம் மிகவும் பிடித்துள்ளதாகவும் அங்கு வசிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி மேகனுக்கு அவர் அளித்த நிச்சயதார்த்த வைர மோதிரமும் ஆப்ரிக்காவில் வாங்கப்பட்டதாகும்.” என தெரிவித்துள்ளது.