ண்டன்

ளவரசர் பிலிப்பின் கார் மோதி ஒரு பெண்ணின் மணிக்கட்டு எலும்பு உடைந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டு மக்கள் அனைவரும் அரச குடும்பத்தின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் ஆவார்கள்.   இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத்.   டியூக் ஆஃப் எடின்பர்க் எனப்படும் இளவரசர் பிலிப்  இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் கணவர் ஆவார்.  இவருக்கு தற்போது 97 வயதாகிறது.   இவர் தற்போது குவின்ஸ் நார்ஃபோக் எஸ்டேட்டில் வசித்து வருகிறார்.

கடந்த வியாழன் அன்று 46 வயதான எம்மா ஃபேர்வெதர் என்னும் பெண் தனது தோழி மற்றும் தோழியின் ஒன்பது மாதக் குழந்தை ஆகியோருடன் நண்பரின் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.   அப்போது தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த பிலிப்பின் லாண்ட் ரோவர் கார் இந்த பெண் வந்த காரில் மோதியது.

காரில் சென்ற எம்மாவுக்கு இதனால் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.    காரை செலுத்திய எம்மாவின் தோழிக்கும் அவர் குழந்தைக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.   வேகமாக மோதிய இளவரசர் பிலிப்பின் கார் நிற்காமல் சென்றுள்ளது.    இது எம்மாவுக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளவரசர் பிலிப்

இது குறித்து எம்மா, “எனக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் அரச குடும்பத்தின் மீது மிகுந்த் அன்பும் மரியாதையும் உண்டு.  ஆனால் இளவரசர் பிலிப் காரை நிறுத்தச் சொல்லி எங்களுக்கு என்ன ஆனது எனவோ அல்லது சாரி என ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாம்.   என் மணிக்கட்டு வலியை விட இதனால் மனதில் வலி உண்டாகி உள்ளது.

ஒரு வேளை இளவரசர் பிலிப் காரை நிறுத்தி என்னை விசாரித்திருந்தாலோ நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தலோ உலகமே அவரை புகழ்ந்திருக்கும்.   ஆனால் அது போல நடக்கவில்லை.    இரண்டு தினங்கள் சென்ற பிறகு அரண்மனை ஊழியர்கள் என்னிடம் “அரச குடும்பத்தினர் உங்களை என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்’ என்னும் அட்டையை அளித்தனர்.

தூரத்தில் இருந்து பிலிப் கார் வரும்போதே நான் அதை கவனித்தேன்.  நாங்கள் எதிரில் வருவதைக் கண்டு வேகத்தை குறைப்பார் அல்லது நிறுத்துவார் என மிகவும் எதிர்பார்த்தேன்.   என்னுடைய தோழி மிகவும் மெதுவாக காரை ஓட்டி வந்தார்.  ஆகவே அவர் மீது எவ்வித தவறுமில்லை” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரண்மனை அதிகாரிகள், ”ஏற்கனவே அந்த விபத்தில் சிக்கிய பெண்ணுக்கும் மற்றும் காரை ஓட்டிய பெண்ணுக்கும் வருத்தம் தெரிவிக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.    பனி மூட்டம் அதிகம் இருந்ததால் இளவரசர் பிலிப் அந்த காரை கவனிக்கவில்லை” என தகவல் அளித்துள்ளனர்.

இந்த விபத்து நடந்து சுமார் 48 மணி நேரம் கழித்து அதாவது ஞாயிறு அன்று இளவரசர் சீட் பெல்ட் அணியாமல் காரை செலுத்திய  புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.