மலேசிய மாரியம்மன் கோவிலில் இளவரசர் சார்லஸ் சாமி தரிசனம்!

டில்லி,

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் பினாங்கில் உள்ள மாரியம்மன் கோவில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் தன் மனைவி கமிலாவுடன்  வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதைத்தொடர்ந்து நாளை  இந்தியா வர இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் சார்லஸ் தம்பதியினர் இன்று மலேசியாவில் உள்ள பிரபலமான மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தம்பதியினர் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

கிறிஸ்தவரான சார்லஸ் தம்பதியினர் இந்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.