’’மும்பை நகரை விட ஜெயில் தான் பாதுகாப்பு’’ –நீதிபதியின் ’சர்டிபிகேட்’.


ஜாமீன் கேட்ட கொலை கைதியை மிரள வைக்கும் விதத்தில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு இது:

கொலை வழக்கில் கைதாகி ஜிதேந்திரா மிஸ்ரா என்பவர் நவி மும்பை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

16 மாதங்களாகச் சிறைப்பறவை.

கொரோனாவை காரணம் காட்டி , ஆங்காங்கே கைதிகள் விடுவிக்கப்படுவதால், மிஸ்ராவும் ஜாமீன் கேட்டு பம்பாய் உயர்நீதிமன்றத்தில்  மனு போட்டார்..

வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடந்தது.

கைதியின் சார்பில் சைலேந்திர சிங் என்ற வழக்கறிஞர் ஆஜரானார்.

‘’எதற்காக ஜெயிலை விட்டு வெளியே போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’ என்று எடுத்த எடுப்பிலேயே  கைதியிடம் கேள்வி எழுப்பினர், நீதிபதி.

உங்களுக்கு (மனுதாரர்)  இப்போதைய மும்பை நிலவரம் தெரியாதா?

கொரோனா பரவுவதால் ஊரடங்கு போட்டுள்ளார்கள். அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்கள்? மும்பையை நகரசபை அதிகாரிகள் நிர்வாகம் செய்வதை விட, நீங்கள் இப்போது இருக்கும் இடத்தை ஜெயில் அதிகாரிகள் பிரமாதமாக நிர்வாகம் செய்கிறார்கள். இங்கே தான் உங்களுக்குப் பாதுகாப்பு’’ என்று கூறி ஜாமீன் மனுவை, தள்ளுபடி செய்து விட்டார், நீதிபதி.

வேறு ஏதாவது காரணம் சொல்லி ஜாமீன் கேட்டிருக்கலாமே என்று நொந்து நூலாகி விட்டார், கைதி.

– ஏழுமலை வெங்கடேசன்