சென்னை:
சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் ரெய்டு நடந்து செல்போன்கள், கஞ்சா போன்றவை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து இரண்டாம் நிலை காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உயரதிகாரிகள் ஒத்துழைப்பின்றி தடை செய்யப்பட்ட பொருட்களை சிறையினுள் எடுத்துச்செல்ல முடியாத நிலையில், கீழ் நிலையில் பணியாற்றும் அப்பாவி காவலர் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துளஅளது.
தமிழ்நாடு கூடுதல் டிஜிபி விஜய் குமார் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதிலும் மத்திய சிறைச்சாலைகளில் கடந்த ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் ரெய்டு நடந்தது.   இந்த சிறப்பு சோதனையின் போது சென்னை புழல் சிறையில்  தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணை கைதி மதன் 2 செல்போன் மற்றும் 2 சிம்கார்டுகளும்,. ஆயுள் தண்டனை கைதி இளங்கோவிடமிருந்து ரூ.500/- ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டன.
a
கடந்த இரு  மாதங்களில் சிறைகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனைகளில் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன் – 23, சிம்கார்டுகள் – 15, செல்போன் சார்ஜர்கள் – 13, கஞ்சா – 685 கிராம் மற்றும் பணம் – ரூ.1500/- ஆகியன கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்தமாதம் 25 ஆம் தேதியன்று மத்திய புழல் சிறையில் சிறை அலுவலர் 3 செல்போன்கள் மற்றும் 3 சிம்கார்டுகள், சார்ஜர்கள் மற்றும் 50 கிராம் அளவுள்ள கஞ்சா ஆகியன விசாரணை சிறை கைதிகள் கார்த்திக் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி சிறைவாசிகளுக்கு கொடுத்ததாக, , இரண்டாம் நிலைக் காவலர் கே.பிரசாத் கடந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், “உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் சென்றுவிட முடியாது. ஆனால் உயரதிகாரிகளை விட்டுவிட்டு, கீழ்மட்ட காவலரை பலிகடா ஆக்கிவிட்டார்கள்” என்று சிறைத்துறை காவலர்கள் மத்தியில்  அதிருப்தி எழுந்துள்ளது.