மத்தியப்பிரதேசத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந் நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேர் இந்தூரில் இருந்து ஜபல்பூரில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களில், ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 3 பேரும் சிறைச்சாலையின் உள்ளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஜபல்பூரில்  ஆட்சியர் பாரத் யாதவ் தெரிவித்துள்ளார்.