கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் கைதி தற்கொலை

கடலூர்,

டலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை கைது ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சிறைச்சாலைகளில் கைதிகள் தற்கொலை செய்வது வருவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சுவாதி கொலை வழக்கில் அவரை கொலை செய்த கொலையாளி சென்னை புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் அவ்வப்போது தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாகி வருகிறது.

நேற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விழுப்புரம் மாவட்டம் கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இவரது பெயர் ராஜமாணிக்கம் என்ற ஆயுள்தண்டனை கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆறு மாதத்தில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஐந்து கைதிகள் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.