முசாஃபர் நகர்

த்திரப் பிரதேச முசாஃபர் நகர் சிறையில் மூன்று சிறைக்கைதிகள் செல்ஃபி எடுத்து முகநூலில் வெளியிட்டது சிறை அதிகாரிகள் இடையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கடந்த ஆண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக விஜய் சவுத்ரி என்பவர் கைது செய்யப்பட்டார்.   இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.     இதே சிறையில் கொலை வழக்கில் கைதாகிய இரு நபர்கள் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   இவர்கள் மூவருக்கும் இடையில் நட்பு உருவாகி உள்ளது.

தற்போது விஜய் சவுத்ரி தனது சிறை நண்பர்களுடன் சேர்ந்து தனது மொபைலில் செல்ஃபி எடுத்து தனது முகநூலில் பதிந்துள்ளார்.   இவர் சிறையில் இருந்து செல்ஃபி எடுத்து புகைப்படம் எடுத்து பதிவிட்டது பரபரப்பாகியது.   பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.   மேலும் ஏற்கனவே அவர் இரு புகைப்படங்களும் எடுத்து இதே போல் பதிந்துள்ளார்.   தற்போது பலரும் இதை பகிரவே சிறை அதிகாரிகளுக்கு தெரிய வந்து  மொபைலை கைப்பற்றி உள்ளனர்.

முசாஃபர்நகர் சிறை அதிகாரி ஒருவர், “கைதிகளுக்கு யார் மொபைலை கொடுத்தனர் என்பது இன்னும் தெரிய வில்லை.    அதை கண்டுபிடிக்க விசாரணை நடத்தி வருகிறோம்.   சிறையில் மொபைல் உபயோகிப்பது குற்றம் என்னும் போதிலும் இது தொடர்கிறது.   இனி சிறையில் மொபைல் உபயோகிப்பதை தடை செய்ய ஜாமர் கருவி பொறுத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.