ஜெயில் கைதிகளுக்கு இன்சூரன்ஸ்: தமிழக அரசு திட்டம்

--

சென்னை:

மிழக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிறைத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைச்சாலைகளில் சுமார் 3600க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை காப்பீடு திட்டத்தில் இணைக்க தமிழக சிறைத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கடந்த   2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி சுரக்‌ஷா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய 2 காப்பீடு (இன்சூரன்ஸ்)  திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளார்கள்.

முதல் கட்டமாக இந்த காப்பீடு திட்டத்தில்,  புழல் மத்திய சிறையில் உள்ள 450 கைதிகள், வேலூர் ஜெயிலில் உள்ள 260 கைதிகள், பாளையங்கோட்டை ஜெயிலில் உள்ள 168 கைதிகள் மற்றும் புழல், திருச்சி சிறையில் உள்ள 32 பெண் கைதிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

இதன் காரணமாக கைதிகளின்  மரணம், விபத்து மற்றும் உறுப்புகள் இழப்பு ஆகியவைகளுக்கு இழப்பீடு வழங்கவும் காப்பீடு திட்டத்தில் வழிவகை உள்ளது. அதன்படி விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்த வேண்டும். கைதி விபத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஜெயிலில் கைதிகள் செய்யும் வேலைகளுக்கு சம்பளமாக வழங்கப்படும் தொகை அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அந்த தொகையை வைத்து இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டப்படும் சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அசு தோஸ் சுக்லா தெரிவித்து உள்ளார்.