லக்னோ:

உ.பி. மாநிலம் ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள உராய் சிறை வளாகத்தில் அழகுக்காக ரூ. 5 லட்சம் செலவில் விலையுயர்ந்த செடிகள் மற்றும் தாவரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த செடிகள் மற்றும் தாவரங்களை அப்பகுதியில் சுற்றித் திரிந்த கழுதைகள் மேய்ந்து நாசம் செய்துவிட்டன.

இதனையடுத்து கடந்த 24ம் தேதி ஜலாவுன் போலீசார் அந்த கழுதைகளை உராய் சிறையில் அடைத்தனர். தனது கழுதைகள் காணாததை அறிந்த கமலேஷ் பல இடங்களில் தேடி அலைந்தார். இறுதியில் கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து உராய் சிறை நிர்வாகத்திடம் கழுதைகளை விடுவிக்க கோரினார். அதற்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. பாஜக உள்ளூர் பிரமுகர் சக்தி காஹோயின் உதவியுடன் சிறையில் இருந்த கழுதைகளை கமலேஷ் மீட்டுள்ளார்.