கட்டாயத் தனிமைக் காலம் முடிந்து ப்ரித்விராஜ் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி செய்யும் புகைப்படம்….!

ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆடுஜீவிதம்’.

கொரோனா நெருக்கடியால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடந்த இரண்டு மாதங்களாக ஜோர்டான் நாட்டில் சிக்கியிருந்த படக்குழு, கடந்த வாரம் இந்தியா திரும்பியது. இந்தியா திரும்பிய அனைவரும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்தக் கட்டாயத் தனிமைக் காலம் முடிந்து ப்ரித்விராஜ் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது உடற்பயிற்சிக் கூடத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை ப்ரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை ப்ரித்விராஜ் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.