கட்டாக்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கவல்ல பிருத்வி ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இரவு நேரத்திலும், சுமார் 300 கி.மீ. தூரம் பறந்து சென்று அங்குள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல பிரித்வி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

இது அணுஆயுதங்களையும் சுமந்துசெல்ல வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒடிசாவில் வழக்கமாக ஏவுகணை சோதனை நடத்தப்படும் கடற்கரைப் பகுதியில் இச்சோதனை நடத்தப்பட்டது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ அமைப்புதான் ஏவுகணைகளை தயாரித்து ராணுவத்திற்கு வழங்கி வருகிறது.

குறுகிய தூர ஏவுகணைகளை தயார்செய்து, அவற்றை சோதனை செய்து, அவ‍ை வெற்றிபெற்றவுடன் ராணுவத்திடம் ஒப்படைக்கும் பணிகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன.