சூப்பர் ஓவரில் வெற்றியை தட்டிச்சென்ற டில்லி… பிரித்விஷா அபார ஆட்டம்

டில்லி:

டில்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 10வது போட்டியில், டெல்லி கேப்பிட்டல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் 20 ஓவரில் ஒரே ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. அதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது.

இதில் டில்லி அசத்தலாக ஆடி வெற்றியை தட்டிச்சென்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டில்லி அணி வீரர் பிரித்வி ஷா அபாரமாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 99 ரன்னில் வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நேற்றைய அணியின்போது, டில்லி அணியில் 4 வீரர்கள் மாற்றப்பட்டனர். இஷாந்த் ஷர்மா, கீமோ பால், ராகுல் திவேதியா, அக்‌ஷர் பட்டேல்  ஆகியோருக்கு  பதிலாக கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல் பட்டேல், சந்தீப் லாமிச்சன்னே, ஹனுமா விஹாரி இடம் பிடித்தனர்.

அதுபோல,  கொல்கத்தா அணியில் காயம் காரணமாக சுனில் நரினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, அவருக்கு பதிலாக  நிகில் நாய்க் சேர்க்கப்பட்டார்.

போட்டியில்  ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்  பவுலிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக கொல்கத்தா களத்தில் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக நிகில் நாய்க், கிறிஸ்லின் இறங்கினார். ஆனால் டில்லி அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், நிகில் 7 ரன்னிலும், கிறிஸ்லின் 20 ரன்லும் வெளியேறினர்.

அதையடுது களமிறங்கிய உத்தப்பா மற்றமி நிதிஷ் ராண, சுப்மான் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற கொல்கத்தா அணி 9.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாமல் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வெளியேறியது கொல்கத்தா  ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கேப்டன் தினேஷ் கார்த்திக், ரசல் இணைந்தனர். இந்த இணை அதிரடியாக ஆடியது. ஆட்டமும் சூடுபிடித்தது. ரசல் வழக்கம் போல சிக்சர் மழை பொழிந்தார். ஹர்ஷல் ஓவரில் ரசல் அடித்த பந்து, மைதானத்தின் மேற்கூரைக்கு சென்றது.  62 ரன்னுக்கு அவுட்டாகி ரசல் வெளியேற  தினேஷ் கார்த்திக் (50) அரைசதம் கடந்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 185/8 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் (10) அவுட்டாகாமல் இருந்தார்.

186 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்விஷாவும், தவானும் களமிறங்கினர். ஷிகர் தவான் 16 ரன் எடுத்த நிலையில் அவுட்டாக, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பிரித்விஷாவுக்கு கை கொடுத்தார். அவரு 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டனார். அடுத்து ரிசபந் பந்த் 15 பந்துக்கு 11ரன் எடுத்த நிலையில் வெளியேற, கொலின் இறங்கினார். அவரும் 10 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய  ஹனுமா விகாரி 2 ரன்னில் வந்தவேகத்தில் வெளியேற இறுதியாக ஹர்சல் பட்டேல் களமிறங்கினார்.

இந்த நிலையில் டில்லி அணி 20 ஓவரில் 185/6 ரன்கள் மட்டும் எடுக்க போட்டி சமன் ஆனது. ஆட்டத்தில் பிரித்விஷா 55 பந்துகளில், 3 சிக்சர், 12 பவுண்டரிகள் எடுத்து 99 ரன் எடுத்திருந்தார். அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்க 99 ரன்னில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சூப்பர் ஓவர்

இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இரு அணிகளுக் கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படுவதாகவும்,  3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே விளையாட முடியும் என்ற நிபந்தனைகளுடன் ஆட்டம் மீண்டும் விறுவிறுப்புடன்  தொடங்கியது.

முதலில் டில்லி களமிறங்கியது.  கொல்கத்தா வீரர் பிரசித் பந்து வீசினார். இதில், கேப்டன் ஸ்ரேயாஸ் 4 ரன்களும்,  ரிஷாப் ரன்களும் எடுத்திருந்தனர். ஒரு ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது.

இதையடுத்து, கொல்கத்தா அணி சார்பில்,  ரசல், தினேஷ் கார்த்திக் களமிறங்கினர்.  அவர்களுக்க டில்லி வீரர் ரபாடா பந்து வீசினார். முதல் பந்திலேயே ரசல் பவுண்டரிஅடிக்க ஆட்டம் விறுவிறுப்பானது. இதனால் உஷாரான ரபாடா பந்துவீச்சை மேலும் வேகப்படுத்தினார். 3வது பந்தில் ரசல் போல்டாகி வெளியேற  4, 5வது பந்தில்  2 ரன் கிடைத்தது. 6வது பந்தில் 4 ரன் தேவை என்ற நிலையில் உத்தப்பா, 1 ரன் மட்டும் எடுக்க முடிந்தது. இதன் காரணமாக சூப்பர் ஓவரில்  கொல்கத்தாவுக்கு 7 ரன்கள் மட்டுமே கிடைத்து.

இதையடுத்து டில்லி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் ரசல் தனது அதிரடிஆட்டத்தை காட்ட,  லாமிச்சன்னேவின் சுழற்பந்துவீச்சில்  21 ரன்னில் இருந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசிய ‘புல்டாஸ்’ பந்து ஒன்று அவரது இடது தோள்பட்டையை பலமாக தாக்கியது.

வலியால் துடித்த அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து மீண்டும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.