பிரித்விராஜ் தயாரிப்பில் உருவாகிறது ‘குருதி’…..!

‘9’ மற்றும் ‘டிரைவிங் லைசன்ஸ்’ படங்களை தொடர்ந்து தற்போது தனது மூன்றாவது தயாரிப்பை அறிவித்துள்ளார் பிரித்விராஜ்.

இப்படத்தை மனு வாரியர் இயக்கவுள்ளார். மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் முரளி கோபி, ரோஷன் மேத்யூ, ஸ்ரீண்டா, நவாஸ் வள்ளிக்குன்னு உள்ளிட்ட பலர் பிரித்விராஜுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அனுஷ் பல்யால் எழுதியுள்ள இக்கதைக்கு அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். டிசம்பர் 9-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.