பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ், தமிழ் படங்களிலும் நடித்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். அவர் இப்போது “COLD CASE” என்ற புதிய மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இதன் ஷுட்டிங் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை ஆரம்பமானது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

உதவி காவல்துறை ஆணையராக (ஏ.சி.பி.) நடிக்கும் பிரிதிவிராஜ் கேரக்டர் பெயர், சத்யஜித்.

தாணு பாலக் இயக்கும் இந்த படத்தில் தமிழில் ‘அருவி’ படத்தில் நடித்த அதீதிராவ், பிரிதிவிராஜ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரிதிவிராஜ் ஏற்கனவே சத்யம், காக்கி, மும்பை போலீஸ், மெமரீஸ் ஆகிய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.

ஷுட்டிங்கின் முதல் நாளில் எடுக்கப்பட்ட காட்சிகளை பிரிதிவிராஜ், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

– பா. பாரதி