கொரோனா தனிமை முடிந்து குடும்பத்தினருடன் இணைந்த நடிகர்..

டிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படப் பிடிப்புக்காக சென்றார். அங்கு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தால் படக் குழுவினருடன் அங்கேயே சிக்கிக் கொண்டார். சுமார் 2 மாதம் அவர் அங்கு தவித்தார். ஒரு வழியாக விமானம் மூலம் மீட்டுகேரளா அழைத்து வரப்பட்டனர்.

ஊர் திரும்பியும் பிரித்விராஜ் வீட்டுக்கு செல்ல முடியவில்லை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவருக்கு கொரோனா தொற்று பரிசோனை நடைபெற்றது. அதில் தொற்று இல்லை என்று உறுதியானது. பிறகு குடும்பத்தினருடன் இணைந்தார். குடும்பத்துடன் இணைந்த மகிழ்ச்சியான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.