மறைந்த இயக்குனர் பற்றி மனம் திறந்த பிரித்விராஜ்.. ’என்னில் பாதி உன்னுடன் வந்திவிட்டது’

’ஐய்யப்பனும் கோஷியும்’ இயக்குனர் சச்சி என்கிற சச்சிதானந்தம் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு 48 வயது. இவர் இயக்கிய ஐய்யப்பனும் கோஷியும் படத்தில் பிரித்விராஜ், பிஜுமேனன் நடித்தனர்.


இயக்குனரின் மரணம் பற்றி அதிர்ச்சி அடைந்த பிரித்விராஜ், தனது இணைய தள பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவவது:
சச்சி … நிறைய செய்திகள் வந்துள்ளன. எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. என்னிடம் உங்களைப்பற்றி பேசி பகிர்ந்தனர். நீங்கள் எப்படி தாங்கிக் கொண்டீர்கள் என்று கேட்டு ஆறுதல் சொன்னார்கள். என்னையும் உங்களையும் என்னையும் பற்றி அறிந்தவர்கள் இருக்கிறார்கள். நான் மவுன அஞ்சலி செலுத்துவதை புரிந்துகொண்டார்கள். பலரும் என்னிடம் உங்களைப்பாறி சொல்லும்போது நீங்கள் ‘உயர்ந்த நிலைக்குச் சென்றீர்கள் என்பதுதான்’. 23 வருடமாக பழகி இருக்கி றோம். என்னில் பாதி உன்னுடன் சென்று விட்டது. ஆனால்நீ என்னுள் இருகிறாய்’ என்றார்.