விமான செக் இன் பாக்கேஜ் கட்டணங்கள் உயர்வு

டில்லி

ண்டிகோ, கோஏர், மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்களில் 15 கிலோவுக்கு மேல் உள்ள லக்கேஜுகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள தனியார் விமானங்களில் எகானமி வகுப்பு பயணிகளுக்கு 15 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.   அதற்கு மேல் உள்ள லக்கேஜுகளுக்கான கட்டணத்தை தற்போது இண்டிகோ, கோஏர் மற்றும் ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனங்கள் உயர்த்ஹி உள்ளன.  தற்போது அரசு நடத்தும் ஏர் இந்தியா நிறுவனத்தில் மட்டும் 25 கிலோ வரை அனுமதிக்கப்படுகிறது.

இந்த வகையில் கோஏர் நிறுவனம் இந்த லக்கேஜ் கட்டணங்கள் உயர்வை நேற்று முதல் அமுல்படுத்தி உள்ளது.    இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள்  அதற்கு முன் தினமான வெள்ளிக்கிழமையில் இருந்து அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனங்கள் முன் கூட்டியே லக்கேஜ் டிக்கட் வாங்குபவர்களுக்கு 5 கிலோவுக்கும் ரூ.1425. 10 கிலோவுக்கு ரூ.2850  மற்றும் 15 கிலோவுக்கு ரூ 4275 என வசூலிக்கப்பட்டது.  தற்போது இந்த கட்டணங்கள் 5 கிலோவுக்கு ரூ.1900, 10 கிலோவுக்கு ரூ.3800, 15 கிலோவுக்கு ரூ.4275 என மாற்றப்பபட்டுள்ளது.

அதே நேரத்தில் முன் கூட்டியே லக்கேஜ் டிக்கட் வாங்காதவர்களுக்கு 15 கிலோவுக்கு மேல் உள்ள ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ. 400 வசூலிக்கப்படும்.   அதே நேரத்தில் மொத்த லக்கேஜுகளின் எடை 25 கிலோவுக்குள் அடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Private airways in india raise luggage charges
-=-