புதுடெல்லி: இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்புகளை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கப்படும் என்றுள்ளார் மத்திய அணுசக்தி இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காதபோது இஸ்ரோவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதற்காக ஒரு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.

இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் 500 நிறுவனங்கள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் செயல்படும் பரந்துபட்ட பகுதிகள், பிரிவுகள் பொருட்களையும், இயந்திர வடிவமைப்புகளையும், மின்னணு வடிவமைப்புகளையும், சிஸ்டம் மேம்பாடுகளையும், ஒருங்கிணைப்புகளையும் வழங்குகின்றன” என்றுள்ளார் அவர்.

அரசின் இந்த முடிவை விஞ்ஞானிகள் வரவேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், விமர்சனங்களும் எழுந்துள்ளன.