சென்னை,

ரசின் உத்தரவை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ப சட்டத்திருத்தம் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதில்லை.

இதுகுறித்து, அரசும் பலமுறை தனியார் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியும், தனியார் நிறுவனங்கள் கண்டுகொள்வது இல்லை

இந்நிலையில், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ப சட்டத்திருத்தம் செய்வ தற்கான சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் இன்று சட்டமன்றத்தில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில்,  அவசர காலங்களிலும், சிறப்பு நேர்வு கருதியும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டால் அதனை தனியார் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவது இல்லை என அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ப தமிழ்நாடுதொழில் நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ள தாகவும் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டதிருத்த முன்வடிவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.