கொரோனா சிகிச்சை தனியார் மருத்துவமனை கட்டணம் நிர்ணயம்… தமிழகஅரசு

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று  சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் எவ்வளவு என்ற  விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது.

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதில், சாதாரண அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  Grade- A1 மற்றும் A2ல் (பொது வார்டு) அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Grade – A3 மற்றும் A4 அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Grade- A1 மற்றும் A2, Grade – A3 மற்றும் A4ல் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) உள்ளவருக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது.

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு  மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளின் மூலம் கொரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.