Random image

தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி

னியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவ மனைகளுக்கு அரசு மலிவாக மற்றும் சில இடங்களில் இலவசமாக நிலங்கள் வழங்கி உள்ளன.   இந்த மருத்துவமனைகளுக்கும் அரசுக்கும்  இடையிலான ஒப்பந்தம் குறித்து இன்று ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கில்  ”அரசிடம் இருந்து மலிவு விலையில் மற்றும் இலவசமாக நிலம் பெறும் தனியார் மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.   அது மட்டுமின்றி மொத்த படுக்கைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை இந்த இலவச சிகிச்சைக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

இதை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றாவிடில்  அது ஒப்பந்தத்தை மீறிய செயலாக கருதப்படும்.

இது குறித்து உச்சநீதிமன்றம் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும்  கண்காணிக்க உள்ளது.   இந்த உத்தரவை பின்பற்றாத மருத்துவமனைகளின் மீது டில்லி அரசுக்கு நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.   மேலும் டில்லி அரசு இது குறித்த அறிக்கைகளை குறிப்பிட்ட காலங்களில் நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.