தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: டிவி நடிகர் உயிரிழப்பு

மதுரை:

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்துக் குள்ளானதில், அதில் பயணம் செய்த டிவி நடிகர் மதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, மதுரை அருகே மேலூர் பகுதியில்  தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில்,  சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் துணை நடிகர் மதன்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.