தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கை: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

சென்னை:

டிப்படை வசதி இல்லாததால், மூடப்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

சென்னையில் உள்ள பொன்னையா ராமஜெயம் தனியார் மருத்துவ கல்லூரியில் முறையான கட்டமைப்பு வசதி இல்லாததால் அதை மூட இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக அங்கு மருத்துவ படிப்பில் சேர்ந்த 103 மாணவர்களின் நிலை கேள்விக்குறி யானது. இதையடுத்து, மாணவர்கள் சார்பில் சென்ன உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், அவர்களுக்கு மற்ற தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கையை தமிழகஅரசு எடுக்கவும் கூறியது.

இதையடுத்து, அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மற்ற மனியார் மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. 6 தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், தனியார் கல்லூரிகளில் சேர எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தங்களை அரசு கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என கோரினர். அரசு கல்லூரியில் அந்த மாணவர்களை சேர்க்க இயலாது என தமிழக அரசு கூறியதால், சென்னை ஐகோர்ட்டு வழக்கை முடித்து வைத்தது.

இதை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் உச்சநீதி மன்ற்ததில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை  உயர்நீதி மன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்றும்,  சென்னை உயர்நீதி மன்ற உத்தரவையே செயல்படுத்துமாறு உத்தரவிட்டு மாணவர்கள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ponnaiah Ramajeyam Medical college, Private Medical College, supreme court
-=-