எம்எல்ஏ, எம்.பி.க்களை திரும்ப பெறும் மசோதா தாக்கல்

டெல்லி:

எம்எல்ஏ., எம்.பி.க்கள் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர்களை வாக்காளர்கள் திரும்ப பெறும் தனி நபர் சட்ட மசோதாவை உ.பி. சுல்தான்பூர் தொகுதி பா.ஜ எம்.பி. வருண் காந்தி லோக்சபாவில் கொண்டு வந்துள்ளார்.

இதன் மூலம் 2 ஆண்டுகள் கழித்து 75 சதவீத வாக்காளர்கள் திரும்ப அழைத்தால் இச்சட்டம் அமலாக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பேரனும், சஞ்சய்&மேனகா காந்தி மகனுமான வருண்காந்தி கொண்டு வந்துள்ள மசோதா தான் தற்போது தீயாக பற்றி எரிகிறது.

இது குறித்து வருண்காந்தி கூறுகையில், ‘‘நான் இந்த மசோதா குறித்து பல காலமாக சிந்தித்ததுண்டு. இதை சரியான முறையில் வடிவமைக்க வேண்டும். இதை யாரும் தவறாக பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கொண்டு வர வேண் டும். சுயநல நோக்கம் கொண்ட மக்களால் நான் கடத்தபடுவதை விரும்பவில்லை.

அதனால் இந்த மசோதாவை வடிவமைக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன். நான் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்க விரும்பவில்லை. ஜனநாயகத்தை ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்பது தான் நோக்கம், இதற்காக நான் வ க்கீல்களை ஆலோசிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை புரிந்து கொண்டேன்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘நமது அரசியலமைப்பு சட்டமும்ம், நாம் உருவாக்கிய சட்டங்களும் நடைமுறையில் உள்ளது. எனது மசோதா முற்றிலும் சரியாக இருக்க முடியாது. இதை விவாதித்து மேம்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தோடு இச்சட்டம் முடி ந்துவிடக் கூடாது. சமுதாயத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த முயற்சி எடுத்துள்ளேன்.

ஜனநாயகம் நம் நாட்டில் சிக்கலாகி வருகிறது. இளைஞர்கள் அதிக விழிப்புடனும், அதிக செயல் திறனுடன் இருக்கிறார்கள். அரசியல் வகுப்பை இளைஞர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொறுப்புடமை, வெளிப்படைதன்மை, ஆழ்ந்த ஜனநாயகம் இவை மூன்று தான் முக்கியமாக பிரதிபலிக்க வேண்டும்’’ என்றார் வருண்காந்தி.

தொடர்ந்த அவர் கூறுகையில், ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் சட்டதிருத்தம் கொண்டு வந்து தற்போதைய காலத்திற்கு ஏற்ப அதை செம்மைபடுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள சட்டத்துக்கு இது கூடுதல் அறிவை ஏற்ப டுத்தும். பிரதிநிதிகள் தேர்வு செய்வதன் மதிப்பை அதிகரிக்க வேண்டும்.

மக்களின் ஒப்புதலை பெற வேண்டும். அரசியல் செயல்பாடுகளுக்கும் இளைஞர்களின் ஆசைகளுக்கு இடையே இடைவெளி உள்ளது. அரசியல் செயல்பாட்டில் இளைஞர்களை கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்த முயற்சி செய்து வருகிறேன். இதற்கான நேரம் வந்துள்ளது. அதனால் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published.