95 பேருக்கு கொரோனாவை  பரப்பிய தனியார் ஊழியர் ..

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள் தொடர்பாளராக (பி.ஆர்.ஓ.) பணியாற்றி வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது.

ஆனால் அதனை மறைத்து ஊர் ஊராக அவர், அலட்சியமாகச்  சுற்றித்திரிந்துள்ளார்.

அவரது குடும்பத்தார் கோவையில் உள்ளனர். அவர்களைப் பார்க்க ஊட்டியில் இருந்து அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார்.

755 பேர் வேலை பார்க்கும் அந்த ஆலையில் சகஜமாக நடமாடி இருக்கிறார்.

பி.ஆர்.ஓ. என்பதால், ஆலையின் நிர்வாக அலுவலகம், உற்பத்தி பிரிவு என அனைத்து இடங்களிலும் கால் பதித்துள்ளார்.

அண்மையில் கோவை சென்ற அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அங்குள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அவர் வேலை பார்க்கும் அலுவலக ஊழியர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 755 பேருக்குப்  பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஊர்ஜிதம் ஆனது.

இந்த 95 பேர் யார். யாரைச் சந்தித்தார்கள்? அவர்களுக்கு நோய் அறிகுறி ஏதும் உள்ளதா? என்பதைக் கண்டறியும் பணியில் நீலகிரி மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

95 பேருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்த அந்த தொழிற்சாலையை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

-பா.பாரதி.