Random image

தனியாரால் மின்னணு வாக்கு இயந்திரம் விற்கப்படுகிறது : அதிர்ச்சி தகவல்

டில்லி

டில்லி பல்கலைக்கழக தேர்தல் குறித்து தேர்தல் அலுவலர் வெளியிட்ட கடித்தத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தனியாராலும் விற்கப்படும் தகவல் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.   இந்த தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது    அந்த இயந்திரங்களில் பழுதுள்ளதாக புகார் எழுந்தது.   மேலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

அதனால் காங்கிரஸ் கட்சி சார்பான மாணவர் அணியான இந்திய தேசிய மாணவர் அணி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தச் சொல்லி போராட்டம் நடத்தியது.   இதற்கு பாஜக மாணவர் அணியான ஏ பி வி பி மறுப்பு தெரிவித்தது.  இந்த போராட்டஙகளினால் ஒரு மணி நேரம் வாக்கு எணிக்கை நிறுத்தப்பட்டது.   மீண்டும் வாக்கு எண்ணிகை தொடங்கியும் எதிர்ப்புகள் வலுத்ததால் இந்த தேர்தலை ரத்து செய்ய பல்கலை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது

இந்த மின்னணு வாக்கெடுப்பு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் அளித்ததாக கூறப்படுவதை ஆணையம் மறுத்துள்ளது.  ஆணையத்தின் அறிக்கையில், ”நாங்கள் தனியார் யாருக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களை விற்கவில்லை.   மாணவர்கள் புகார் தெரிவித்துள்ள இயந்திரங்களை பல்கலைக்கழகம் தனியார் யாரிடமாவது இருந்து வாங்கி இருக்கலாம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் மின்னணு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தனியாரும் மின்னனு வாக்கு இயந்திரங்கள் விற்பதாக வந்துள்ள தகவல்கள் பலரிடையே ஐயத்தை உருவாக்கி உள்ளது.