திடீரென மாயமான தனியார் பள்ளி ஆசிரியை: காவல்துறை விசாரணை

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் நாட்றம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார். இன்று மதியம் பள்ளி முடிந்தவுடன், 3 மணிக்குள் திரும்பிவிடுவதாக தனது தாய் ஜெயலட்சுமியிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார் விஜயலட்சுமி. பிற்பகலில் பள்ளி நேரம் முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற நிலையில், விஜயலட்சுமி மட்டும் வீடு வந்து சேரவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக விஜயலட்சுமியின் பள்ளி ஆசிரியை தோழிகளை விசாரித்த அவரது தாயார், பின்னர் தனது மகளை காணவில்லை எனக் கூறி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இப்புகாரை அடிப்படையாக கொண்டு, காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி