Random image

பொதுத்தேர்வு பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயன்படுத்தப்படுவர்! அரசு தேர்வுத்துறை

சென்னை:

பொதுத்தேர்வு பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயன்படுத்தப்படுவார்கள் என்று அரசு தேர்வுத்துறைதனியார் விளக்கம்அளித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் மத்தியில்  பரவும் தகவல்கள் தவறானது என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில்  10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2ந்தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தம் ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைய உள்ளது. தற்போது தேர்வுக்காண பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் வழங்கக்கூடாது என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதாக, தகவல்கள் ஆசிரியர்கள் மத்தியில் பரவின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம்  கல்வித்துறை கவனத்துக்கு சென்றதைத் தொடர்ந்து,  அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களைபோல  தகுதியான தனியார் பள்ளிஆசிரியர்களும் பொதுத் தேர்வுவேலைகளில் பயன்படுத்தப்படுவார்கள். தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை17 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தற்போது உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களைக்கொண்டு தேர்வை நடத்த முடியாது. அதனால் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் பொதுத்தேர்வு பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள்….

முதன்மை கண்காணிப்பாளர், மையங்களை மேற்பார்வை யிடுதல், விடைத்தாள் மற்றும் வினாத்தாளை எடுத்துச் செல்லு தல் போன்ற முக்கிய பணிகளுக்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்தான் நியமனம் செய்யப்படுவார்கள்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு  அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளே அவர்களுக்கு வழங்கப்படும். அதில் முதன்மைக் கண்காணிப்பாளர் பணிக்குத்தான் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினோம். அதைசிலர் தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கலாம். அனைத்து பணிநியமனங்களும் வெளிப்படையாக உரிய விதி களின்படியே நடைபெறும். இது வழக்கமான நடைமுறைதான்.

இவ்வாறு கூறினர்.