சென்னை:

மிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணம் தொடர்பான விவரங்களை ஒரு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளை யடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில், தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக்க ட்டணம் தொடர்பான விவரங்களை ஒரு மாதத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி கட்டணம் தொடர்பாக மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் 2018-2019ம் ஆண்டில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகம் வசூலிப்ப தாக கூறியிருந்தார். எனவே 2018-2021 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு, தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வுவிசாரித்து வந்தது. நேற்றைய விசாரணயின்போது,   2018 முதல் 2021 வரையிலான ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கல்விக்கட்டண விபரத்தை வெளியிட அரசுத் தரப்பில் 3 மாத கால அவகாசம் கோரப்பட்டது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 1 மாத கால அவகாசத்திற்குள் கல்விக் கட்டணம் பற்றிய விவரத்தை வெளியிடுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.