சென்னை:
மிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தும்படி பெற்றோர்களை வலியுறுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், வேலை வாய்ப்பு முடங்கியுள்ள நிலையில் கட்டணத்தை கட்டியே ஆக வேண்டும் என்று பள்ளிகள் உறுதியாக கூறி வருகின்றன. ஆசிரியர் களுக்கு சம்பளம் கொடுக்கவே கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பணம் கட்டாத மாணவர்களை அதிரடியாக நீக்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கட்டணம் வசூல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.  கடந்த விசாரணையின்போது,  ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கட்டணம் வசூலிக்க லாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு அவசர உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், “பள்ளி கட்டணம் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தன்னுடைய முடிவை தெரிவிக் கும் வரையில் தனியார் பள்ளிகள் காத்திருக்க வேண்டும். நாளை வரை எந்தவிதமான கட்டணத்தை யும் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.