நாளை தனியார் பள்ளிகள் இயங்காது! கூட்டமைப்பு அறிவிப்பு  

 

சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை ஒட்டி, தனியார் பள்ளிகள் இயங்காது என்று மிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு  அறவித்துள்ளது.

இந்த அமைப்பின் செயலாளர் டி.சி. இளங்கோ விடுத்துள்ள அறிவிப்பில் “தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமென ஒட்டுமொத்த மக்களும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக்கோரி தன்னெழுச்சியாக இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக்கோரி  போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நாளை தமிழகம் முழுதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி வாகனங்கள் இயங்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே நாளைய முழு அடைப்பின் போது தனியார் பள்ளிகள் இயங்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.