உ.பி. மாநில பாஜ அமைச்சர்களின் லஞ்ச பேர வீடியோ வைரல்! பரபரப்பு தகவல்கள் (வீடியோ)

லக்னோ:

உ.பி. மாநில தலைமை செயலகத்தின் உள்ளே 3 மாநில அமைச்சர்களின் உதவியாளர்கள்  லஞ்சம் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி தலைமையிலான பாஜக மாநில அரசு ஆட்சி செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போன யோகி அரசு தற்போது ஊழலிலும் சாதனை செய்துள்ளது.

மாநில அமைச்சரவையில் உள்ள   3 அமைச்சர்களின் தனி உதவியாளர்கள் லக்னோவில் உள்ள அரசின்  தலைமை செயலக அலுவலகத்திற்குள்ளேயே லஞ்சம் குறித்து பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை  தனியார் ஊடகமான ஏபிபி செய்தி நிறுவனம் வீடியோவை வெளியிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநில தலைமைச்செயலாகம் லக்னோவில் உள்ளது. இங்குள்ள அலவலகத்தில் அமைச்சர்களின் தனி உதவியாளர்கள், சுரங்கத் தொழில் மற்றும் பாடப்புத்தகம் அச்சிடுவது போன்வற்றில் சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

உ.பி. மாநில அமைச்சரவையில், சுரங்க தொழில், கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக அர்ச்சனா பாண்டே,  பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், கல்வித்துறை அமைச்சர் சந்திப்சிங் ஆகியோர்களின் உதவியாளர்கள் லஞ்சம் பெறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

உ.பி. மாநிலத்தில் கல்வித்துறையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகம் தொடர்பான காண்டிராக்டில் தங்களுடைய பங்கு தரப்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திப்சிங்கின் உதவியாளர் சந்தோஷ் அவதி லஞ்சம் கேட்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அதுபோல. ஷாஹரன்புர் சுரங்கம்  ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் அர்ச்சனா பான்டேவின் உதவியாளர் எஸ்.பி.திரிபாதி  தொடர்பாக லஞ்சம் கேட்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

இது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில தலைமைச் செயலாளர் இதுகுறித்து சம்பந்தப்பபட்டவர்கள் உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில பாஜக தலைமை, லஞ்சம் கொடுப்பதில் சிக்கியுள்ளவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊழல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி ‘பூரண சகிப்புத்தன்மையை’ செயல்படுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறப்பட்டுள்ளது.

Source: ABP News