சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 27ந்தேதி முதல், தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளன.

தற்போதைய சூழலில் தனியார் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் பொது மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த  தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இந்த  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கட்டிடங்களாக மாறியதான்  காரணமாகவும் நிலத்தடி நீர் சேமிப்பு இன்றி தண்ணீர் தட்டுப்படு ஏற்பட்டுள்ளது.  தலைநகர் சென்னையில் தண்ணீர்  பஞ்சம்  காரணமாக மக்கள் காலி குடங்களுன் வீதி வீதியாக ஓடும் பரிதாப நிலைக்கு தள்ளுப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தணியார் லாரிகள் தண்ணீர் விற்பனை செய்வது தொடர்பாக உயர்நீதி மன்றம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய நிலையில், தமிழக அரசு தனியார் தண்ணீர் லாரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை  விதித்து உள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள தனியார் தண்ணீர் லாரி உமையாளர்கள்  அதிரடியாக வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை ஏதோ திருட்டு போல அரசு முத்திரை குத்த தொடங்கிவிட்டது. செழிப்பான நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை தேவைப்படும் இடங்களுக்கு சென்று மக்களிடம் வினியோகம் செய்கிறோம் , அதற்கு அரசு தடை போடுவதாக வும்  குற்றம் சாட்டுகின்றனர் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்.

முதல்கட்டமாக வரும் 27ந்தேதி  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இயங்கும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் இந்த போராட்டத்தில் பங்குபெறுகின்றன. இதன் காரணமாக சென்னையில் தண்ணீர் பிரச்சினை மேலும் பயமுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.