சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களில், இன்றுமுதல் (27ந்தேதி), தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், இன்றுமுதல் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அமைச்சர் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதால், வேலைநிறுத்தம் கைவிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு அனுமதியின்றி தனியார் நிலங்களில், தண்ணீர் உரிஞ்சப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், . நீர்நிலை, விளைநிலங்களில் நீர் எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தனியார் லாரிகள் தண்ணீர் எடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதையடுத்து, வரும் 27ந்தேதி  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இயங்கும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் வேலுமணியுடன் பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதாலும், மக்களின் சிரமத்தை மனதில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம் என  தனியார் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்து உள்ளார்